தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவிடம், தமிழ் நடிகர் ஒருவர் அதிமீறி பேசியதை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். 

மேலும் செய்திகள்: திருமண ஆசை காட்டி உல்லாசம்... நடிகைக்கு கட்டாய வலை விரித்த விஜய் பட ஒளிப்பதிவாளர் கைது..!
 

ஓவர் கவர்ச்சி வேடமாக இருந்தாலும், தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது என்றால், உடனடியாக நடிக்க ஒப்புக்கொள்பவர் நடிகை ராதிகா ஆப்தே. அந்த வகையில் இதுவரை 'தோனி' , 'அழகு ராஜா' , 'கபாலி', 'சித்திரம் பேசுதடி 2 ' ஆகிய படங்களில் மட்டுமே தமிழில் நடித்துள்ளார்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடித்த 'கபாலி' திரைப்படம் இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. இப்படி ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பிரபல தமிழ் நடிகர் தன்னிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக கூறி, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் ராதிகா ஆப்தே.

மேலும் செய்திகள்: பிராமணர் குறித்து சர்ச்சை வசனம்... உச்ச கட்ட ஆபாச காட்சிகள்..! பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் "காட்மேன்' டீசர்!
 

இது குறித்து பேசியுள்ள அவர், அந்த நடிகரின் பெயரை தெரிவிக்காமல், ஒரு நாள் ஷூட்டிங்கின் போது எனக்கு அதிக முதுகு வலி ஏற்பட்டது. எனினும் ஷூட்டிங் பணிகள் முடிந்த பிறகு தான் அங்கிருந்து நான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றேன். அதே ஓட்டலில் தான் இந்த படத்தில் நடித்த பிரபல நடிகரும் தங்கி இருந்தார். இருவரும் லிப்ட்டில் சென்றுகொண்டிருக்கும் போது, இரவு ஏதாவது அவசியம் ஏற்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுமாறும், உங்கள் முதுகு வலிக்கு நான் மருந்து தடவி விட ரூமுக்கு வரவா என, தவறான நோக்கத்தில் அந்த நடிகர் பேசியதாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் இயக்கத்தில்... மீண்டும் சரித்திர கதையில் நடிக்க ஓகே சொன்ன தளபதி!
 

ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள இவரிடம், தன்னுடைய சேட்டையை கட்டிய நடிகர் யார்? என்பது இதுவரை வெளியாகாத புரிதாகவே உள்ளது.