"சீப் கேம் பிளான் வேண்டாம் Bully Gang".. தினேஷ் விவகாரம் - மாயா & கோ-வை கிழித்தெடுத்த ரக்ஷிதாவின் ஆவேச போஸ்ட்!
Rachitha Mahalakshmi : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 7, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் பிரதீப்பின் ரெட் கார்டு நிகழ்விற்கு பிறகு மாயா மற்றும் பூர்ணிமா மீது பல கொதிப்படைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை அதிக அளவில் போட்டியாளர்கள் களமிறங்கினர். பிக் மற்றும் ஸ்மால் என்று இரண்டு வீடுகளில் மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர். இதில் பாவா செல்லதுரை தாமாக முன்வந்து வெளியேறிய நிலையில், பலராலும் விரும்பபட்ட நடிகர் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் பிரதீபால் பெண்களுக்கு பிரச்சனை இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில், ரெட் கார்டு அவருக்கு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து மாயா மற்றும் பூர்ணிமா மீது கடுப்பான ரசிகர்கள், அவர்கள் இருவரும் தான் பிரதீப்பை திட்டமிட்டு வெளியேற்றியதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இப்பொது வைல்ட் கார்டு போட்டியாளராக தினேஷ் களமிறங்கியுள்ள நிலையில் அவரையும் மாயா மற்றும் பூர்ணிமா டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.
அண்மையில் மாயா மற்றும் பூர்ணிமா பேசுவது போல வெளியான ஒரு காணொளியில், அவர்கள் தினேஷை டார்கெட் செய்வது போல பேசியுள்ளனர். மேலும் அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரக்ஷிதாவுடன் தினேஷ் பற்றி பேசவேண்டும் என்று அந்த காணொளியில் அவர்கள் பேசுவது போல அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு தினேஷை, ரக்ஷிதா திருமணம் செய்த நிலையில் ஒரு சில வருடங்களில் அவர்கள் பிரிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னை பற்றி அவர்கள் இருவரும் பேசவேண்டிய அவசியம் என்ன, நான் ஏற்கனவே வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்து வருகின்றேன் என்று கூறி பேசியுள்ளார் அவர். இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கடும் கட்டமாக பூர்ணிமா மற்றும் மாயாவை கடுமையாக சாடி பேசியுள்ளார்.

