விஜயகுமாரின் பேத்திக்கு சீக்கிரம் டும் டும் டும்.. உருகிய தாய்.. மகளோடு டாக்டர் அனிதா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Anitha Vijayakumar : தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார். அவருடைய குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்தவர்கள் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு விதிவிலக்காக திகழ்பவர் தான் அனிதா விஜயகுமார்.
Anitha Daughter
நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.
Anitha
இவர்கள் அனைவருக்கும் மூத்தவர் தான் அனிதா விஜயகுமார், சினிமா துறையில் இருந்து தள்ளி இருப்பதும் இவர்தான். தற்பொழுது வெளிநாட்டில் தனது கணவருடன் வாழ்ந்து வரும் அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவராக பணிசெய்து வருகின்றார்.
Doctor Anitha vijayakumar
வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டாலும் கூட, அவ்வப்போது சென்னை வந்து தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட மருத்துவர் அனிதா மறப்பதில்லை. அண்மையில் தனது பிறந்தநாளை கூட அவர் சென்னையில் தனது தாய் மற்றும் தந்தையோடு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
Doctor Anitha
இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் டாக்டர் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியாவிற்கு தற்பொழுது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த சில புகைப்படங்களையும் அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க.. விளையாட்டில் மத அரசியல்.. ரஜினியின் லால் சலாம் டீசர் ரிலீஸ்.!!