Asianet News TamilAsianet News Tamil

அடக்கடவுளே.. நடிக்கிறது அம்மா ரோல்.. ஆனால் ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு கவர்ச்சி காட்டிய பாக்யராஜ் ஹீரோயீன்..!

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அம்மாவாக நடித்து வரும் பிரகதி சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் ஓ..சொல்றியா மாமா பாடலுக்கு போட்டுள்ள குத்தாட்டம் வைரலாகி வருகிறது..

actress pragathi dance for pushpa song
Author
Chennai, First Published Jan 24, 2022, 3:35 PM IST

80களில் முன்னணி நடிகையாக இருந்த, பிரகதி இந்தி பாடல் ஒன்றுக்கு மாடர்ன் உடையில் செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், 1994- ஆம் ஆண்டு வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும்,  பின்பு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர், பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். தற்போது 'அரண்மனை கிளி' சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக, மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

actress pragathi dance for pushpa song

சமீபத்தில், இவர் தன்னுடைய மகனுடன் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்'  பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 44 வயதில் இவர் போட்ட  நச் ஆட்டம் பார்பவர்களையே அசர வைத்தது. பார்ப்பதற்கு சீனியர் நடிகை என்றே தெரியாதது போல் சரியான உடல் எடையோடு பிட்டாக வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் கொடுத்த ஒரு பேட்டியில், இவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல காமெடியன் பற்றி பேசியுள்ளார். மூத்த காமெடி நடிகராக வலம்  வரும் அவர், அவருடன் நடித்த நாட்களில் தன்னிடம் மிகவும் சகஜமாக பழகினார். சில தினங்களில் அவர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டவிதம் எனக்கு புரிந்தது. அநாகரிகமாக அவர் பேசியது தன்னை அதிர்ச்சியாக்கியது. அதனை நான் அனைவர் மத்தியிலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பின்னர் அவரை தனியாக அழைத்து, கேரவனுக்கு வர சொன்னேன். அங்கு அவரிடம் உங்களை தவறான நோக்கத்தில் நான் சிக்னல் கொடுத்தேனா என கேட்டதுமே அவருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. வெக்கி  தலை குனிந்தார். இதை அனைவர் மத்தியிலும் கேட்டல், உங்களுக்கு அவமானம் என கண்டித்து அனுப்பியதாகவும், பின்னர் அவர் என்னிடம் தவறான நோக்கத்துடன் பழகவில்லை என தெரிவித்துள்ளார். 

actress pragathi dance for pushpa song

இந்நிலையில் அவ்வப்போது, இளம் நடிகைகளுக்கே... செம்ம டஃப் கொடுப்பது போல், டான்ஸ் ஆடி, ரசிகர்களை வியக்க வைத்து வரும் பிரகதி, தற்போது உடற்பயிற்சி  கூடத்தில் ஓ..சொல்றியா மாமா பாடலுக்கு போட்டுள்ள குத்தாட்டம் வைரலாகி வருகிறது..

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios