கடந்த 10 ஆண்டுகளாக தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இறுதியாக தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'காப்பான்' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து, லாக்கப், தலைவி, போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் அம்மா ரவ்லாவுடன் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் கடந்த 3ம் தேதி அன்று பூர்ணாவின் வீட்டிற்கு சென்ற ரபீக் உள்ளிட்ட சிலர், நகைக்கடை உரிமையாளர் என அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரபீக் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளனர். இதையடுத்து திருமண பேச்சு பேசுவது போல் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் பூர்ணாவின் வீடு, கார் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து தங்களுக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். 

 

இதையும் படிங்க:  ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம்ம கிளாமர்... 49 வயசிலும் கவர்ச்சியில் குறை வைக்காத ரம்யா கிருஷ்ணன்...!

இதனால் அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ், ஷெரீஃப் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட மோசமான கும்பலிடம் இருந்து நடிகை பூர்ணா தப்பியுள்ளது அவர்களது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

இந்நிலையில் நடிகை பூர்ணா தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், இந்த பிரச்சனையின் போது எனக்கு ஆதரவாக செயல்பட்ட நண்பர்களுக்கு நன்றி. சில ஊடகங்கள் என்னை மோசடி கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அந்த கும்பலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. திருமணம் என்ற பெயரில் போலி பெயர்கள், முகவரிகளுடன் எங்களை ஏமாற்றியதால் தான் எனது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த திருமண சம்பந்தத்தின் மூலம் அவர்கள் என்ன திட்டம் திட்டியிருந்தார்கள் என்றே எங்களுக்கு தெரியாது. எங்களுடைய புகாரை அடுத்து கேரள போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். எனவே விசாரணை முடியும் வரை எனது குடும்பத்தை பற்றியும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்திகளில் எல்லை மீற வேண்டாம் என கோரிக்கைவிடுத்துள்ளார்.