இந்தி திரையுலகில் பிளாக் ஃபிரைடே, தேவ் டி, தி லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் மீது பாலிவுட்டின் இளம் நடிகையான பாயல் கோஷ் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறினார். ​வீட்டிற்கு வர சொல்லி அனுராக் தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள அறை ஒன்றின் சோபா மீது தன்னை தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் கூறினார். அந்த குற்றச்சாட்டை அனுராக் மறுத்தார், இதையடுத்து மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாயல். 

 

இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

இதையடுத்து அனுராக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. வெர்சோவா போலீஸ் நிலையத்தில் அக்டோபர் 10ம் தேதி ஆஜரான அனுராக்கிடம் கிட்டதட்ட 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றச்சாட்டப்பட்டு அன்று மும்பையில் இல்லை என்றும், இலங்கையில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். 

 

இதையும் படிங்க:இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

இதனிடையே தனக்கு நீதி கோரி மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடமும் முறையிட்டார். அப்போது பாயலுக்கு ஆதரவாகவும், ஆளுநரை சந்தித்து முறையிடவும் ஏற்பாடு செய்தவர் ராமதாஸ் அதாவாலே. ஆரம்பத்தில் இருந்து தனக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ராமதாஸ் அதாவாலேவின் ரிபப்ளிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியில் பாயல் கோஷ் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த முதல் நாளே பாயலுக்கு மகளிர் அணியின் துணைத் தலைவி பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.