Asianet News Tamil

இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா?... பிரபல நடிகையான இவருக்கு அதை பார்த்தாலே பயமாம்...!

தற்போது நடிகை பார்வதி தனது க்யூட்டான சின்ன வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

Actress Parvathy Shared her Childhood photo and old memory
Author
Chennai, First Published Apr 23, 2020, 2:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி. 'பூ' படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பார்வதியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தனர். அதன் பின்னர் 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்தார். சிறந்த நடிகை என்று நடிகர்கள் புகழ்ந்தாலும் பார்வதிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. 

இதையும் படிங்க: ஷூட்டிங் எடுக்க மட்டும் வர்றீங்க...விஜய் மாதிரி உங்களுக்கும் பொறுப்பு இருக்கு...புதுச்சேரி முதல்வரின் அதிரடி!

மலையாளத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் அங்கும் படவாய்ப்புகள் குறைவு. இதனிடையே பிரபல கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால் மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது இயக்குநர் அவதாரம் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் திரைத்துறை பிரபலங்கள் பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தப்படுத்துவது, ஒர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் தங்களது குழந்தை பருவ புகைப்படங்களுடன் சேர்ந்து மலரும் நினைவுகளையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I was scared of the camera. I wouldn’t stop crying. The lens was a strange all-seeing deep eye that pointed at me. After several failed attempts, I somehow managed to unglue myself from my mother and bravely stood there. Alone. Wide eyed. Petrified. Won’t back down. How did that smile creep up there? I was fooled, people! They told me GEMS (the chocolate, not stones) would pop out of the mysterious eye if I smiled! Gems’ഉം വന്നില്ല ഒരു കുന്തോം വന്നില്ല ! ഒരു വിചിത്ര ചിരിയുമായി ഞാൻ അവിടെ പ്ലിങ്ങി നിന്നു ! All that popped out of this exercise was this. The proof of the creepiest expression of bravery that I mastered at such a tender age. Strange, I still wear it like a bawse! I love that I have vivid memories of the day even now. And I miss that frock. 🔆

A post shared by Parvathy Thiruvothu (@par_vathy) on Apr 22, 2020 at 10:17am PDT

இதையும் படிங்க: ‘ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...!

தற்போது நடிகை பார்வதி தனது க்யூட்டான சின்ன வயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அத்துடன் கேமராவை பார்த்து நான் பயந்தேன். அழுவதை நிறுத்தவே இல்லை. போட்டோ எடுக்க மேற்கொள்ளப்பட்ட நிறைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. ஒருவழியாக என் அம்மாவிடம் இருந்து என்னை பிரித்து நிற்க வைத்தார்கள். தனியாக, பரந்த என் கண்கள் கீழே பார்க்கவே இல்லை. அந்த சிரிப்பு எப்படி வந்தது?... நான் சிரித்தால் ஜெம்ஸ் சாக்லெட் என கண்களில் இருந்து வெளியே வரும் என சொல்லி நம்ப வைத்ததாக கூறியுள்ளார். கேமராவை பார்த்தாலே பயப்பட்ட இந்த குழந்தை தான் இப்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது ஆச்சர்யம் தான்...! 

Follow Us:
Download App:
  • android
  • ios