மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பார்வதி. 'பூ' படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பார்வதியின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தனர். அதன் பின்னர் 'மரியான்', 'சென்னையில் ஒருநாள்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்தார். சிறந்த நடிகை என்று நடிகர்கள் புகழ்ந்தாலும் பார்வதிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. 

மலையாளத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதால் அங்கும் படவாய்ப்புகள் குறைவு. இதனிடையே பிரபல கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆதரவாக செயல்பட்டதால் மலையாள திரையுலகில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். 

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட பார்வதி, விரைவில் ரோகிணி, ரேவதி, நந்திதா தாஸ், ஸ்ரீபிரியா வரிசையில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நடிகை பார்வதி இரண்டு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

காருக்குள் தோழிகளுடன் அமர்ந்திருக்கும் பார்வதி, தல அஜித்தின் “வேதாளம்” படத்தில் இடம் பெற்ற “ஆலுமா டோலுமா” பாடலுக்கு மிகவும் கலக்கலாக நடனமாடியுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும்  நிலையில், நடிகை பார்வதி எப்படி தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவைபரப்பி சோசியல் மீடியாவில் பரப்பி வருவதாக தெரிகிறது.