‘என்னைப்பற்றி வரும் விமர்சனங்களை நான் எப்போதும் கண்டுகொள்வதேயில்லை. யார் எது சொன்னாலும் அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் வெளியேற்றிவிடும் வழக்கம் கொண்டவள் நான்’என்று போல்டாகப் பேசுகிறார் நடிகை ஓவியா.

தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்த ‘களவாணி 2’படம் படம் இன்று திரைக்கு வருவதை ஒட்டி நேற்று இயக்குநர் சற்குணம் மற்றும் படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நடிகை ஓவியா. தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடன் கருத்து வேறுபாடு இருந்ததால் அந்த நிகழ்வில் படத்தின் ஹீரோ விமல் கலந்துகொள்ளவில்லை.

அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய ஓவியா,’நான் யாரையும் காதலிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எனக்கு வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை. இப்போது தனி நபராக இருப்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். திருமணம் இந்த சந்தோஷத்திற்கு குறுக்கே வரும் என்பதால் ஆண் துணையே வேண்டாம் என்ற முடிவில் மிக உறுதியாக இருக்கிறேன்.

நான் நடித்த படங்களிலேயே ‘90 எம்.எல்’படம் தான் அதிகம் விமர்சிக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரையில் நான் நடித்த படம் தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக்கொடுத்ததா என்று மட்டுமே பார்ப்பேன்,மற்றவர்களின் விமர்சனங்களைக் கண்டுகொள்ளவே மாட்டேன். 90 எம்.எல் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டால் அதிலும் கண்டிப்பாக நான் நடிப்பேன்’என்கிறார் ஓவியா.