Nivetha Thomas : தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிவேதா தாமஸ் தற்போது உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போய் உள்ளார்.

சென்னையில் பிறந்த வளர்ந்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான மைடியர் பூதம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து ஒன்றிரண்டு படங்களில் நடித்த இவர், கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நிவேதா.

இதையடுத்து ஹீரோயின் வாய்ப்பு சரிவர வராததால் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார் நிவேதா தாமஸ். அதன்படி ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து அசத்திய இவர், அடுத்ததாக பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

இதையும் படியுங்கள்... சூர்யாவை வைத்து சரித்திர படம்... ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் போட்டுள்ள மாஸ்டர் பிளான் - ஒர்க் அவுட் ஆகுமா?

View post on Instagram

இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற நிவேதாவுக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனால் தற்போது டோலிவுட்டில் தான் கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா தாமஸ். அவர் நடிப்பில் தற்போது சாகினி தாகினி என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், நடிகை நிவேதா தாமஸ் இன்ஸ்டாகிராமில் தான் நடனமாடிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். நிவேதா தாமஸின் அந்த வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அதற்கு காரணம் அந்த வீடியோவில் அவர் படு குண்டாக காட்சி அளிக்கிறார். நிவேதா தாமஸா இது என சந்தேகத்துடன் கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... இண்டர்வெல்லையே ஓடி வந்துடலாம்னு தோணுச்சு... பிரம்மாஸ்திரா படம் பார்த்து கதறிய பிரபல தமிழ் பாடகர்