ஒரு நாளாவது ரஜினிக்கு என் கையால் சமைச்சு போடணும் என தனது ஆசையை நடிகை நிவேதா தாமஸ் வெளிபடுத்தியுள்ளார்.   அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் ,  இவர் அந்த படத்தில் தனக்கு நேர்ந்த சில சுவாரசியமான சம்பவங்களை  பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் . இதுபற்றி தெரிவித்துள்ள அவர்,   பாபநாசம் படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு மகளாக நடித்து இருக்கிறேன் இப்போது ரஜினிக்கும் மகளாக நடித்துவிட்டேன் ,  

தமிழ் திரை உலகின் இருபெரும் நட்சத்திரங்களுக்கு மகளாக நடித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது,   நான் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான் என்றார் ,  தர்பார் பட ஷூட்டிங்கின்போது நானும் ரஜினியும் தந்தை மகளாக  நடித்த  காட்சிகள் சுமார் 45 நாட்கள் படமாக்கப்பட்டன .  ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டும்  என்றதுமே எனக்கு பயம் வந்துவிட்டது .  ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை  பார்த்தவுடன் பயமெல்லாம் பறந்துவிட்டது . 

அவரைத் என தந்தையாகவே பாவிக்க  தொடங்கி விட்டேன் ,  அவர் எப்போதும் விதவிதமாக சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவார் ,அவர் எப்போதும் உணவு பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்,   ஒரு நாளாவது அவருக்கு பிடித்த உணவுகளை நான்  சமைத்து போட வேண்டும் என்றவர் ,  ரஜினி மற்ற காட்சிகளில் நடிப்பதை காட்டிலும் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதே  அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.