சென்னையில் நடிகை நயன்தாரா தனது காதலருடன் ஜோடியாக வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இன்னொருபுறம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றுவருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த இருவரும் கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.