பின்னர் என்னுடைய ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்றும் என்னை மிரட்டினான். ஆனால் நான் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டேன். 

கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் திடீரென ஓவர் வெயிட் போட்ட நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

உடல் எடையை குறைத்த பிறகு சும்மா இருக்க கூடாது என நினைத்த நமீதா, ஹாட் உடையில் அதிரிபுதிரி கவர்ச்சியுடன் போட்டோ ஷூட்களை நடத்தி, இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இதை வைத்து நமீதாவிடம் ஓவராக விளையாட்டு காட்டிய ரசிகரை அவரது அடையாளத்துடன் சமூகத்திற்கு அறிவித்து சரியான தண்டனை கொடுத்துள்ளார். 

View post on Instagram

இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!

அந்த ஆபாச ஆசாமியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நமீதா, இவன் பெயர் தமிழ் செந்தமிழ், இவன் எனக்கு ஹாய் ஐயிட்டம் என்று மெசேஜ் அனுப்பினான். கேட்டதற்கு என்னுடைய இன்ஸ்டா கணக்கை யாரோ ஹேக் செய்து இப்படி தவறான மெசேஜ்களை அனுப்புவதாக கூறினான். அதன் பின்னர் என்னுடைய ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்றும் என்னை மிரட்டினான். ஆனால் நான் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டேன். நான் சினிமாவில் இருப்பதால் இப்படி கேட்டானா?... இல்லை நான் கவர்ச்சியான வேடங்களில் நடிப்பதால் இப்படி கேட்டானா? என்று தெரியவில்லை என்று மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.