actress mumtaz Lamentations in big boss

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர் கமல்ஹாசனின் மாஸ் என்டரியோடு தொடங்கிய நிகழ்ச்சியில், நடிகை ஓவியா உட்பட 17 போட்டியாளர்கள் கலந்து 
கலந்து கொண்டுள்ளார்கள் .

தற்போது துவங்கியுள்ள, இந்த நிகழ்ச்சியில் யார் ஓவியா அளவிற்கு ரசிகர்கள் மனதில், இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓவியாவும் கெஸ்டாக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு நம்ப முடியாத நிகழ்வாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, போட்டியாளர்கள் சிலருக்கு அவர்களது, லக்கேஜ் கொடுக்கப்படாது என்று பிக்பாஸ் குரல் கூறுகிறது. 

இதைக்கேட்டு மிகவும் ஷாக் ஆன போட்டியாளர்கள், குறிப்பாக நடிகை மும்தாஜ், மற்றும் சென்ராயன் ஆகியோர் கேமராவின் முன்பு தங்களுடைய உடைகள் வேண்டும் என கெஞ்சுகின்றனர். இவர்களின் அவஸ்தையை பார்த்து நடிகை ஓவியா, உங்களை எல்லாம் பார்த்தால், மிகவும் பாவமாக உள்ளது என்று சிரிக்கிறார்.

இன்று அவர்களுக்கு லக்கேஜ் கிடைக்குமா..? கிடைக்காதா...? என பொறுத்திருந்து பார்போம். 

Scroll to load tweet…