MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் பட லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வாரிசுருட்டிய துரந்தர் 2..! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

அஜித் பட லைஃப் டைம் வசூலை ஒரே நாளில் வாரிசுருட்டிய துரந்தர் 2..! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

ரன்வீர் சிங்கின் 'துரந்தர்: தி ரிவென்ஜ்' படம் முதல் நாளே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியுள்ளது. ஆனாலும், இந்திய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியவில்லை.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dhurandhar 2 Day 1 Box Office
Image Credit : X

Dhurandhar 2 Day 1 Box Office

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்: தி ரிவென்ஜ்' திரைப்படம் முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 100.23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில், இந்தி வெர்ஷன் மட்டும் 96.78 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மீதமுள்ள 3.48 கோடி ரூபாய் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இருந்து கிடைத்துள்ளது. இதுதவிர இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் மூலம் 43 கோடி வசூல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் ரூ.143 கோடி வசூலித்துள்ளது. இது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூலைவிட அதிகமாகும்.

'துரந்தர்: தி ரிவென்ஜ்' ஒரு ஸ்பை ஆக்‌ஷன் படமாக முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தாலும், இந்தியாவின் டாப் 3 ஓப்பனிங் படங்களின் பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிவிட்டது. இந்தப் பட்டியலில் படம் நான்காவது இடத்தில் உள்ளது. வாங்க, இந்தியாவின் டாப் 3 ஓப்பனிங் படங்களைப் பார்ப்போம்.

24
புஷ்பா 2 சாதனையை நெருங்காத துரந்தர் 2
Image Credit : X

புஷ்பா 2 சாதனையை நெருங்காத துரந்தர் 2

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2: தி ரூல்' தெலுங்குப் படம்தான், இதுவரை இந்தியாவிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படம். சுகுமார் இயக்கிய இந்த ஆக்‌ஷன் த்ரில்லர், முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 164 கோடி ரூபாய் வசூலித்தது. 'துரந்தர்' படத்தின் பெய்டு ப்ரிவியூ வசூலான 43 கோடியைச் சேர்த்தாலும், 'புஷ்பா 2' வசூலை நெருங்க முடியாது. 'புஷ்பா 2' படத்தின் மொத்த வசூல், இந்தியாவில் 1,234 கோடியும், உலகளவில் 1,742 கோடியும் ஆகும்.

Related Articles

Related image1
துரந்தர் 2-வில் மோடி... அரங்கம் அதிர விசில் பறக்கும் பிரதமரின் சீன் வைரல்
Related image2
துரந்தர் 2 படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
34
டாப் 5 படங்கள்
Image Credit : X

டாப் 5 படங்கள்

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பிரம்மாண்ட பீரியட் ஆக்‌ஷன் படமான 'RRR', முதல் நாளில் சுமார் 133 கோடி ரூபாய் வசூல் செய்தது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த இந்த பான்-இந்தியா தெலுங்குப் படம், இந்தியாவில் வாழ்நாள் வசூலாக 782 கோடியும், உலகளவில் 1230 கோடியும் வசூலித்தது. இது ஒரு பான்-இந்தியா கன்னடப் படம். இதில் ராக்கிங் ஸ்டார் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் முதல் நாளில் நாடு முழுவதும் 116 கோடி ரூபாய் வசூல் செய்தது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்தப் படம், இந்தியாவில் 860 கோடியும், உலகளவில் 1,215 கோடியும் வசூலித்தது.

44
துரந்தர் 1ஐ விட அதிக வசூல்
Image Credit : X

துரந்தர் 1ஐ விட அதிக வசூல்

இந்தியாவின் டாப் 5 ஓப்பனிங் படங்களின் பட்டியலில் 5-வது இடத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'கல்கி 2898 AD' உள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய இந்தப் படம், முதல் நாளில் இந்தியாவில் 95 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் மொத்த வசூல் இந்தியாவில் 646 கோடியாகவும், உலகளவில் சுமார் 1,042 கோடியாகவும் இருந்தது. துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆனபோது முதல் நாளில் ரூ.28 கோடி வசூலித்து இருந்தது. அதைக்காட்டிலும் துரந்தர் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 4 மடங்கு அதிக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
பாலிவுட்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image2
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!
Recommended image3
சரோகேசி மூலம் குழந்தை? - விமர்சனங்களுக்கு அதிரடி பதில் சொன்ன இந்திரஜா சங்கர்
Related Stories
Recommended image1
துரந்தர் 2-வில் மோடி... அரங்கம் அதிர விசில் பறக்கும் பிரதமரின் சீன் வைரல்
Recommended image2
துரந்தர் 2 படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved