MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!

26-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!

Actor ajith kumar and shalini: நடிகர் அஜித், தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை, குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 30 2026, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 அஜித் குமார்:
Image Credit : @ajithFC

அஜித் குமார்:

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, கால்பதித்து பல வெற்றி - தோல்விகளை கடந்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அஜித் குமார். நடிப்பை தாண்டியும் பிற துறைகளில் ஆர்வம் காட்டுவது மட்டும் இன்றி அதில் குறிப்பிட்ட சில சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லீ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கார் ரேஸில் சாதனை:
Image Credit : Asianet News

கார் ரேஸில் சாதனை:

இந்த படம் மற்றும் கதைக்களம் உறுதி செய்யப்பட்டாலும், தற்போது வரை அஜித் வெளிநாடுகளில் தன்னுடைய அணியுடன் கார் ரேஸில் கலந்து கொள்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அண்மையில் கூட, பெல்ஜியத்தில் நடந்த 24 மணிநேர கார் ரேஸில், இவரது அணி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை செய்தது. மேலும் தற்போதைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்பட்டது.

34
லேட்டஸ்ட் புகைப்படங்கள்:
Image Credit : shalini instagram

லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

அஜித் கார் ரேஸ் - சினிமா ஷூட்டிங் என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், குடும்பத்தினருடன் ஸ்பெஷல் மோமெண்ட்ஸை கொண்டாட மறந்து இல்லை. அந்த வகையில் பெல்ஜியம் கார் ரேஸுக்கு பின்னர் சென்னை திரும்பிய, அஜித் இந்த சம்மர் ஹாலிடேஸ் நாட்களை குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார். குறிப்பாக, அஜித் தன்னுடைய 26-ஆம் ஆண்டு திருமண நாளை மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆதிவிக்குடன் கொண்டாடிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை அஜித்தின் மனைவி ஷாலினி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

44
தல ரசிகர்கள் கோரிக்கை
Image Credit : shalini instagram

தல ரசிகர்கள் கோரிக்கை

இந்த புகைப்படங்கள் ஏப்ரல் 24-ஆம் தேதி எடுத்து என்றாலும், இதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் திளைத்துள்ளனர். மேலும் நாளை அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இப்போதே வாழ்த்துக்களும் குவித்த வண்ணம் உள்ளது. கண்டிப்பாக ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் புகைப்படங்களையும் வெளியிட வேண்டும் என தல ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் அஜித்தின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக மே 1-ஆம் தேதி பில்லா படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் அஜித்தின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் குமார்
அஜித் கார் பந்தயம்
ஷாலினி அஜித் குமார்
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan : கருப்பு பட ரெக்கார்டை அடிச்சு துவம்சம் செய்ய வரும் ஜனநாயகன்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Theatre and OTT Releases : பக்ரீத் விருந்தாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved