நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து பேசிய வழக்கில் மீண்டும் பிடிவாரண்ட் போடப்பட்டுள்ளது. 

தமிழி சினிமாவில் முன்னணி ஹீரோயின் ரேஞ்சிக்கு சீன் போட்டாலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர வேடத்தில் மட்டுமே நடித்துள்ளவர் மீரா மிதுன். விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஜோடி நம்பர் 1 மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைத்தாலும், சேரன் குறித்து இவர் கிளப்பிய பிரச்சனை இவருக்கு வாக்குகள் குறைந்து, மீரா மிதுன் வெளியேறவும் காரணமாக அமைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்.. ஏன்? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்நிலயில் இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒன்றை வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்: கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!

இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில அவ்வப்போது, விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர் சாட்சி விசாரணைக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், தற்போது 2 ஆவது முறையாக மீரா மிதுனுக்கும் அவரது வழங்கறிஞருக்கும் இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் போடப்பட்டுள்ளது.