பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  இயகத்தில் சிம்பு நடித்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா ; இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இதனால் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடித்த 'சத்திரியன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படி வெல்லும்' ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் பெரிதாக வெற்றி பெற வில்லை. 

மேலும் இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு கதை சொல்ல வந்த பல இயக்குனர்கள் உடல் எடையை குறைக்கும் மாறு கூறியுள்ளனர். 

இதனால் சாப்பாடு பிரியரான இவர் சில மாதங்களாக உணவு கட்டுப்பாடு இருந்து தனது உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது ஒல்லியாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். 

இதில் அவர் ஒல்லியாக தெரிந்தாலும், முன்பு போல் இல்லாமல் அழகு குறைத்து விட்டது என கூறி வருகிறார்கள் ரசிகர்கள். மேலும் அவரின் கண்ணத்தில் விழும் அழகிய குழிகள் மறைந்து விட்டது. இதனை ரசிகர்கள் சில கலாய்த்து வந்தாலும், சிலர் ஷாக் ஆகி உள்ளனர்.