மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா..? இந்த வயதிலேயே தினமும் அவஸ்தை படும் நடிகை!

'சாட்டை' படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார்.
 
actress magima nambiyar yoga treatment for insomnia

மேலும் செய்திகள்: பிரதமர் மோடிக்காக மச்சான்ஸ் நமீதா செய்த செயல்..!
 
மேலும் தற்போது, 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா' உள்பட ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

actress magima nambiyar yoga treatment for insomnia

மேலும் இந்தியாவில் தற்போது 144 தடை கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், திரைப்பட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. எனவே பிரபலங்கள் யாரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அம்மா மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த குழந்தை இப்போ முன்னணி நடிகர்! யார் தெரியுமா?
 
அந்த வகையில் நடிகை மகிமா நம்பியார், தனக்குள் ஒளித்து வைத்திருந்த, ஓவிய திறமையை வெளிப்படுத்தி சமீபத்தில் வெளியிட்டுருந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. மேலும், வீட்டில் உடல்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது என பொழுதை போக்கி வருகிறார். 

actress magima nambiyar yoga treatment for insomnia

இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் 'இன்சோம்னியா' என்கிற தூக்கம் இன்மை பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும்... இதனால், இதனை யோகா மூலம் சரி செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: வாய்ப்பும் இல்லை... வருமானமும் இல்லை... குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக பழம் விற்கும் நடிகர்!
 
பொதுவாக இந்த பிரச்சனை 40 மற்றும் 50 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படும் நிலையில், மிகவும் இளம் வயதிலேயே இந்த பிரச்சனையால் தற்போது நடிகை மகிமா நம்பியார் அவஸ்தை பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios