பிரபல முன்னணி நடிகர் ஒருவர் தன்னுடைய அம்மாவின் மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். 

கொரோனா பிரச்சனையின் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, பிரபலங்கள் அனைவரும் அவ்வப்போது, தங்களுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு, இனிமையான நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால், அம்மா - அப்பாவுடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு, 'ராட்சசன்' திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. கடந்த ஆண்டில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டில் அடுக்கடுக்காக இவரின் படம் வெளியாக தயாராக இருந்தது.

மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன் மருத்துவ மனைக்கு வந்த அஜித்..! என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ..!
 

ஆனால் இந்த கொரோனா பிரச்சனை திரைத்துறையை விட விஷ்ணு விஷாலை தான் வேகமாக சுழட்டி அடித்துள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த “காடன்” திரைப்படமும், எழில் இயக்கத்தில் நடித்த “ஜகஜால கில்லாடி“ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும்  மூடப்பட்டதால், இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “எஃப்ஐஆர்” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். 

மேலும் செய்திகள்: வாய்ப்பும் இல்லை... வருமானமும் இல்லை... குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக பழம் விற்கும் நடிகர்!
 

கொரோனா அச்சம் உலகையே உலுங்கி வரும் இந்த சமயத்தில் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்கலாமா என்று ரசிகர்களிடம் விஷ்ணு விஷால் கருத்து கேட்டிருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் ஓ.கே. சொன்னதை அடுத்து “மோகன்தாஸ்” படத்தின் டைட்டில் டீசரை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

டீசரின் ஆரம்பத்திலேயே விஷ்ணு விஷால் சுத்தியால் யாரையோ ஆக்ரோஷமாக தாக்குகிறார். அப்படியே ரத்தம் சொட்ட, சொட்ட சுத்தியை எடுத்துக்கொண்டு  விஷ்ணு விஷால் நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. கதிகலங்க வைக்கும் இந்த டீசரை பார்க்கும் போதே முழுக்க, முழுக்க த்ரில்லர் கதை என்பது தெளிவாகிறது. 

மேலும் செய்திகள்: நெட்டிசன்கள் கழுவி ஊற்றும் மாடர்ன் உடையை விட... சேலையில் சூப்பராக இருக்கும் ஷாலு ஷம்மு!
 

இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ள பல படங்கள் இவரின் கை வசம் இருந்தாலும், கொரோனா  பிரச்சனை அனைத்தையும் கொலாப்ஸ்  செய்து விட்டது. 

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, காதலி ஜுவாலா கட்டவை கூட சந்திக்காமல், சமூக இடைவெளியோடு தனிமையில் இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு தன்னுடைய பழைய புகைப்படத்தை காட்டி, இனிமையான நினைவுகளை அசைபோட்டு வருகிறார் விஷ்ணு... ஏற்கனவே தன்னுடைய அப்பாவுடன் கையில் துப்பாக்கியோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட இவர் தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIFE ... IT UNFOLDS SO FAST 😍😭

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on May 21, 2020 at 9:20pm PDT