மனைவி ஷாலினியுடன் மருத்துவ மனைக்கு வந்த அஜித்..! என்ன ஆச்சு? வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் தல அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ள காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கும் தல அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ள காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தல, அஜித் பொதுவாக அதிகம் வெளியிடங்களுக்கு செல்லமாட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். தன்னுடைய படவிழாக்கள், திரையுலக கலை விழா என, அனைத்திலுமே தனக்கு கலந்து கொள்ள விருப்பம் இல்லை நாசுக்காக கூறி தவிர்த்து விடுவார்.
அதே போல், மிகவும் நெருக்கமானவர்கள் விசேஷங்களில் மட்டுமே தன்னுடைய மனைவியோடு கலந்து கொள்வார். இந்நிலையில் இவர் திடீர் என தன்னுடைய மனைவி ஷாலினியுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி, பிரபல தனியார் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். ஆனால் இவர் யாரை பார்க்க வந்தார் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாவில்லை.
அதனால்... ரசிகர்கள் அஜித்தின் இந்த திடீர் மருத்துவமனை விசிட்டால் குழப்பத்தில் உள்ளனர்.
வைரலாகும் வீடியோ இதோ