அழகன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மதுமிதா. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதுவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என வளைத்து, வளைத்து அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனம் ஈர்த்தார். 

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் மதுபாலாவிற்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட மதுபாலா, அதன் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார். கடைசியாக தமிழில் அக்னி தேவி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் நடித்தார். 

மதுபாலாவிற்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர். அழகில் அம்மாவையே பிஞ்சும் மதுபாலா மகள்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ச்சப்பி லுக்கில், க்யூட் சிரிப்புடன் இருக்கும் மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்களை காண்போரை சுண்டி இழுக்கிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் என்னது மகளா?, நாங்க உங்க சகோதரிகள்ன்னு இல்ல நினைச்சோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.