திரைப்படத்தில் முழு அர்ப்பணிப்போடு நடித்து, சிறந்த நடிகர் நடிகை என பெயர் எடுக்க வேண்டும் என்பது, வளர்ந்த, மற்றும் வளர்ந்து வரும் நடிகர் நடிகை அனைவருக்கும் உள்ள எண்ணம் தான். சில நடிகைகள் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்து, சண்டை காட்சிகளிலும், மொட்டை அடித்தும் நடிக்கின்றனர்.

அந்த வகையில் 'உன் காதல் இருந்தால்' படத்துக்காக நடிகை ஒருவர், சிகரெட் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம், உன் காதல் இருந்தால்'. இந்த படத்தில் சந்திரிகா ரவி, லேனா, ரியாஷ் கான், சோனா ஹெய்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இவர்களில் நடிகை லோனா, இந்த படத்தில் ஒரு அதிரடியான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக இவர் 1000 சிகரெட் வரை புகைத்து நடித்துள்ளாராம். இந்த திரைப்படம் இன்னும் இரண்டு தினங்களில் வெளியாக உள்ள நிலையில் நடிகை லோனை சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.