​இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய“சுந்தர பாண்டியன்”, சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன். மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான  ‘கும்கி’, ‘பாண்டியநாடு’,  ‘ஜிகர்தண்டா’, ‘மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.  ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். 

கடைசியாக லட்சுமி மேனன், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய ‘றெக்க’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதைத்தொடர்ந்து,  கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.

 

இதையும் படிங்க: பிக்பாஸுக்காக இப்படியா?... பிரபல சீரியலை அவசரமாக முடித்த விஜய் டி.வி... கடுப்பில் ரசிகர்கள்...!

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டபுள் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் நடிக்கிறார். தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி வரும் லட்சுமி மேனன், சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். அதேபோல் பாவாடை, தாவணி, புடவையில் மட்டுமே திரையில் காட்சி தந்த லட்சுமி மேனன், சமீபத்தில் மார்டன் உடையில் மனதை மயங்கும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி, அந்த போட்டோவில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். 

 

இதையும் படிங்க: சீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா?... வெளியானது அதிரடி உண்மை...!

அப்படி லட்சுமி மேனனின் அழகான புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்,  “அழகாக இருக்கீங்க... யாரையாவது திருமணம் செய்து கொண்டு தயவு செய்து அழகான வாழ்க்கை வாழுங்கள். தயவு செய்து சினிமாவை விட்டு சென்று விடுங்கள். நீங்கள் ஒரு ஏஞ்சல்" என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லட்சுமி மேனன்,  “ஒரு அன்பான, பாசமான, என்னுடைய நலம் விரும்பி என்ன நினைக்கிறார் என்றால், என்னைப் போன்ற ஒரு ஏஞ்சல் யாரையாவது திருமணம் செய்துகொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று. மிகவும் மோசமான நினைப்பு இது. வளருங்கள்" என நச்சுனு பதிலளித்துள்ளார். அந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.