1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... பின் கதாநாயகியாக மாறி இன்று வரை சினி துறையிலும் சரி... அரசியலிலும் சரி ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பு. இவர் தற்போது குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக மாறியது வரை, என இரண்டு அரிய புகைப்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: 25 ஆவது திருமண ஆண்டை கொண்டாடும் சச்சின் - அஞ்சலி தம்பதி..! அன்று முதல் இன்றை அழகிய புகைப்படங்கள்!
 

80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. ஒரு தமிழ் நடிகைக்கு ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள் என்றால் அது குஷ்புவிற்கு தான். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான். 

மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பு முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு.

மேலும் செய்திகள்: பிரபல நடிகருக்கு 'கொரோனா'..! திரையுலகினர் மத்தியில் பரபரப்பு!
 

தற்போது இவருக்கு, அவந்திகா, அனந்திதா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் நிறைவு செய்தது போல், இல்வாழ்க்கையில் ஒரு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 

அரசியல் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த குஷ்பு, இடையில் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது முதல் பட அப்டேட்டுகள் வரை அனைத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்கிறார். 

மேலும் செய்திகள்: நடிகருடன் காதல் திருமணம்... கள்ளக்காதல் பிரச்சனை! 4வது முறையாக பெயரை மாற்றி தமிழில் கவனம் செலுத்தும் நடிகை!
 

தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவ்வப்போது தன்னுடைய பழைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், ''1980ல் குழந்தை நட்சத்திரமாக சசி கபூர் நடித்த படத்தில் நடித்த புகைப்படத்தையும் பின் நான்கே வருடத்தில்,  1984 ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்த புகைப்படத்தையும்'' இணைத்து வெளியிட்டுள்ளார். இந்த அரிய புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.