Asianet News Tamil

“சின்னத்தம்பி” படம் பார்த்திருப்பீங்க... அதே மாதிரி குஷ்புவுக்கு 3 அண்ணன்கள் இருக்குறத பார்த்திருக்கீங்களா?

 பிரபு, குஷ்பு நடித்து பல்வேறு சாதனைகளை புரிந்த வெற்றி திரைப்படம் சின்னத்தம்பி, அதில் குஷ்புவிற்கு 3 அண்ணன்மார்கள் இருப்பார்கள். 

Actress Kushbhu Trowback Picture with His  Brothers
Author
Chennai, First Published Apr 23, 2020, 6:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

1980 முதல் இன்று வரை சினி துறையிலும் சரி... தற்போது அரசியலிலும் சரி ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பூ. 80’ஸ் மற்றும் 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழகத்தில் கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் குஷ்புவை தவிர வேறு யாருக்கும் இருந்தது இல்லை. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், சரத்குமார், பிரபு என அப்போதைய முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான். 

மகாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பூ முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழைத் தவிர்த்து மலையாளம் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, 2 பெண் பிள்ளைகளுக்கு தாயாக மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்தி வருகிறார். 

அரசியல் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆரம்பத்தில் திமுகவில் இணைந்து பணியாற்றி வந்த குஷ்பு, இடையில் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது முதல் பட அப்டேட்டுகள் வரை அனைத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்கிறார். 

இதையும் படிங்க: சர்ச், மசூதிகளெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா?.. கோயில் மட்டும் தான் தெரியுதா? ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்...!

தற்போது சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த அண்ணாத்த பட ஷூட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ட்ரையல் ரூமில்... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் மீரா மிதுன் பார்த்த காரியம்... செம்ம கடுப்பில் நெட்டிசன்கள்...!

இந்த லாக்டவுனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள குஷ்பு அதிக உற்சாகத்துடன் சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். தனது பழைய புகைப்படங்களுடன் சேர்ந்து அது சம்பந்தமான நினைவுகளையும் பகிர்ந்துவருகிறார். அப்படி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. பிரபு, குஷ்பு நடித்து பல்வேறு சாதனைகளை புரிந்த வெற்றி திரைப்படம் சின்னத்தம்பி, அதில் குஷ்புவிற்கு 3 அண்ணன்மார்கள் இருப்பார்கள். அதேபோல் நிஜத்திலும் குஷ்புவிற்கு 3 அண்ணன்கள் இருக்கிறார்கள். இளமை பருவத்தில் அண்ணன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதோ...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One of the rare pics from Mumbai days.. me protected by my 3 big brothers.. a la #chinnathambi

A post shared by Khush (@khushsundar) on Apr 22, 2020 at 7:39pm PDT

Follow Us:
Download App:
  • android
  • ios