பிரபலங்களை பற்றி ஏதாவது வதந்திகள் வந்தால், அது காட்டு தீ வேகத்தில் பரவும். அதிலும் அவர்கள் மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். 

இந்நிலையில் சமீபத்தில், நடிகை கோவை சரளாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று ஒரு மர்ம நபர் வதந்தியை கிள்ளி போட்டார். இதனால் அதிர்ச்சியான திரையுலகினர் மற்றும் கோவை சரளாவிற்கு மிகவும் நெருக்கமானவர்கள்...  அது தவறான செய்தி என ஆதங்கத்துடன் நிரூபித்தனர். 

மேலும் தன்னை பற்றி வெளியாகும் தகவல் வதந்தி என கூறி விளக்கமளித்தார் கோவை சரளா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் "என் உடல்நிலை பற்றி பலமுறை வதந்திகள் வெளியாகியிருக்கு. ஆரம்பத்தில் இந்த மாதிரியான வதந்திகள் தனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. பின் இது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது. 

இது போன்ற வதந்தியால் பல முறை வெளிநாட்டில் உள்ள என் சொந்த காரர்கள் போன் மூலம் விசாரித்துள்ளார்கள். மேலும் அடிக்கடி என் சொந்தக்காரர்களை நேரில் போய் பார்ப்பேன். அவங்களும் என்னைப் பார்க்க சென்னைக்கு வருவாங்கள் இப்படி தன்னுடைய வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போகிறது. 

தற்போது , 'தேவி 2' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அதே போல் 'விஸ்வாசம்', 'காஞ்சனா 3' உள்பட நான்கு பெரிய படங்களில் நடித்து முடித்தேன். இந்த ஷூட்டிங் பரபரப்பினால் மற்ற விஷயங்களைப் பெரிதாக கண்டு கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

மேலும் சமீப காலங்களாக சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் உடல்நிலைப் பற்றி அடிக்கடி வதந்தி பரவி வருவது வாடிக்கையாக உள்ளது. இப்படி உண்மை இல்லாதா விஷயத்தை பரப்புவதால் அவளுக்கு என்ன பயன் என்று தான் புரியவில்லை.  சிலர் நான் சீரியஸா இருக்கிறதாகவும்,  யாருமே ஆதரவுக்கு இல்லாமல் தவித்து வருவதாக  பொய்யான செய்தியைச் பரப்பினார்கள். இது உயிரோடு உள்ளவரை கொலைச் செய்யறதுக்குச் சமம்.

இதனை நம்பி பலர் இது போன்ற தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். ஆனால் இது போன்ற தகவல்களில் உண்மை இருக்கிறதா என யாருமே பார்ப்பதில்லை. எனவே சில விஷமிகளால் பரப்பப்படும் இப்படி பட்ட தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் கோவைசரளா.