தமிழில் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்.

இவரின் முதல் படம் மலையாளமாக இருந்தாலும், இவரை வளர்த்து விட்டது தமிழ் சினிமா தான். இவர் 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் 'கௌசல்யா' என்கிற பெயரில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கவிதா என்கிற தன்னுடைய பெயரை கௌசல்யா என்றே மாற்றிக்கொண்டார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், 39 வயதை எட்டிய பின்பும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து, இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் "திருமணம் செய்து கொண்டு, கணவன், குழந்தை, என குறுகிய வட்டத்திற்குள் வாழ நினைக்கவில்லை. தற்போது சுதந்திரமாக வாழ்த்து வருவதாக கூறியுள்ளார். இவரின் பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.