"ஆமா எத எடுக்கலாம்".. பாரில் சிந்தனை சிற்பியாக மாறிய கிரண் - இது இன்ஸ்டாகிராம் பரிதாபங்கள்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மிக ஆக்டிவாக இருப்பவர் கிரண். சுமார் 3.2 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர்.
ஜெய்ப்பூரில் பிறந்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து கடந்த 2016ம் ஆண்டு நடிப்புக்கு ஓய்வு கொடுத்த நடிகை தான் கிரண் ரத்தோட். இவர் அறிமுகமானது ஹிந்தி திரைப்படம் என்றாலும் முதல் முதலில் கடந்த 2002ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான சியான் விக்ரமின் ஜெமினி திரைப்படத்தில் வரும் மனிஷா என்ற கதாபாத்திரம் இவருக்கு மாபெரும் பிரேக் கொடுத்த திரைப்படம்.
இந்திய அரசியல் தலைவர்கள்.. சர்ச்சையான நடிகை கஜோலின் பேச்சு - வலுத்த எதிர்ப்பால் அவர் போட்ட ட்வீட்!
அதன்பிறகு தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார். இறுதியாக சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் மற்றும் இளமை ஊஞ்சலாடுகிறது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.
இருப்பினும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மிக ஆக்டிவாக இருப்பவர் கிரண். சுமார் 3.2 மில்லியன் பேர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். அனுதினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என்று வெளியிட்டு அசத்தி வரும் கிரண் தற்போது கவர்ச்சி குறையாமல் புதிய போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.
மது பாட்டில்கள் நிரம்பிய ஒரு இடத்தில், எதை எடுக்கலாம் என்று எண்ணும் வகையில் யோசித்துக்கொண்டே ஒரு புகைப்படத்தை மிக கவர்ச்சியாக எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அவருடைய இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் தரத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு முறை மேலாடை இன்றி முதுகை காட்டி இவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதை இன்னும் அவர் நீக்கவில்லை என்பது தான் அதில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
அப்போ Celebration ஸ்டார்ட் பண்ணலாமா? வருகின்றார் ஜவான் - நாளை காலை வெளியாகும் குட்டி Prevue!