அப்போ Celebration ஸ்டார்ட் பண்ணலாமா? வருகின்றார் ஜவான் - நாளை காலை வெளியாகும் குட்டி Prevue!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல தமிழ் நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆகையால் தமிழ் ரசிகர்கள் இடையேயும் இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் பாஷா ஷாருக் கான் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு உருவாக துவங்கிய திரைப்படம் தான் "ஜவான்". முதலில் இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் சில தாமதம் ஏற்பட்டதால் தற்பொழுது செப்டம்பர் மாதம் 7ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் மிகப் பெரிய பாலிவுட் நடிகர் என்று பொழுதும், தமிழில் இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் (ஹே ராம் - 2000) தான் நடித்திருக்கிறார் என்ற பொழுதும் தமிழ்நாட்டிலும் அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தின் ஒரு Preview நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வில்லனாகும் மக்கள் செல்வன்.. ஆனா இந்த முறை ராம் சரணுக்கு - இசை புயலோடு வரும் RC16!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல தமிழ் நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆகையால் தமிழ் ரசிகர்கள் இடையேயும் இந்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களை தளபதி விஜய் அவர்களை வைத்து ஹிட் கொடுத்தவர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஜவான் திரைப்படத்தின் Preview, நாளை தளபதி விஜய் அவர்களால் வெளியிடபட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல சின்னத்திரை நடிகையின் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை.!