என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்... நடிகை குஷ்பு போட்ட உருக்கமான டுவிட் - பின்னணி என்ன?
சின்னத்தம்பி படத்தில் ஜோடியாக நடித்த பிரபுவுக்காக தன் இதயம் எப்போதுமே துடிக்கும் என நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. இவர் தற்போது நடிப்பதை ஓரங்கட்டிவிட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவருக்கு பாஜகவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது. இதுதவிர சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார் குஷ்பு. குறிப்பாக டுவிட்டரில் அரசியல் மற்றும் சினிமா குறித்த பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சின்னத்தம்பி படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் குஷ்பு. பி.வாசு இயக்கத்தில் குஷ்பு நடித்த திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்தில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் குஷ்பு. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல்களும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... வாய்ப்பு தேடிப்போன இடத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கிய சூரி.. விடுதலை நாயகனின் வெறித்தனமான சம்பவம்
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “சின்னத்தம்பி திரைப்படம் ரிலீசாகி 32 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்மீது காட்டிய அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். என் இதயம் எப்போதும் இயக்குனர் பி.வாசுவுக்காகவும், பிரபுவுக்காகவும் துடிக்கும். மனதை மயக்கும் இசையை கொடுத்த இளையராஜாவுக்கும், இப்படத்தை தயாரித்த கே.பாலு அவர்களுக்கும் நன்றி. நந்தினி கதாபாத்திரம் என்றென்றும் அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். அனைவரது அன்பிற்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அய்யோ இவரா... டெரரான ஆளாச்சே! விஜய்யின் லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்