வாய்ப்பு தேடிப்போன இடத்தையே சொந்தமாக விலைக்கு வாங்கிய சூரி.. விடுதலை நாயகனின் வெறித்தனமான சம்பவம்
விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் அலுவலகம் வாங்கியதன் சுவாரஸ்ய பின்னணியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்த சூரி, இன்று ஹீரோவாக அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இதுவரை காமெடியனாக கலக்கி வந்த சூரி, வெற்றிமாறனின் விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிலையில், சூரிக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி படத்தின் நாயகனாக நடித்து வருகிறார் சூரி. இதுதவிர மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இப்படி தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வரும் சூரி, இந்த இடத்துக்கு வரும் முன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். குறிப்பாக இவருக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் வெண்ணிலா கபடி குழு, அப்படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது. இந்த படத்தின் மூலம் பரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமான சூரி, இன்று வெற்றிமாறன் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
ஆனால் வெண்ணிலா கபடிக் குழு படத்துக்கு முன் பல ஆண்டுகள் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியுடன் பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் சூரி. அப்படி ஒரு சம்பவம் தான் அவரது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத இடத்தைக் கொடுத்துள்ளார். ஆர்யா நடிப்பில் வெளிவந்த கலாபக் காதலன் திரைப்படத்தில் நடிக்க ஆள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டதும் அதற்கான ஆடிசனுக்கு சென்றிருக்கிறார் சூரி. அப்போது ஒரு சீனை நடித்துக்காட்ட சொல்லியிருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... பாட்டுத்தலைவனுக்கு பிறந்தநாள்! பாமரனையும் கவர்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்
இதையடுத்து அந்த சீனை நடிக்க தொடங்கும்போதே திடீரென மயங்கி விழுந்துவிட்டாராம் சூரி. பின்னர் அங்கிருந்தவர் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிவிட்டு என்ன ஆச்சு என கேட்கும்போது தான், 2 நாட்கள் சாப்பிடவில்லை, அதனால் தான் மயங்கி விழுந்துவிட்டேன் என கூறி இருக்கிறார் சூரி. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து அனுப்பிவிட்டார்களாம்.
பின்னர் வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பின்னர் வாழ்க்கையே தலைகீழாக மாறிய பின்னர், அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியதால், தனக்கென ஒரு அலுவலகம் போட வேண்டும் என அதற்காக இடம்தேடி அலைந்துள்ளார் சூரி. தெரிந்தவர்களிடம் இதுகுறித்து சொல்லி உள்ளார். அந்த சமயத்தில் தெரிந்தவர் மூலம் ஒரு இடம் இருப்பது தெரியவந்ததும். அதை பிடிக்க முடிவு செய்திருக்கிறார் சூரி.
ஒருநாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அந்த இடத்தை காட்ட சூரியை அழைத்து சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த இடத்தை பார்த்ததும் சூரி செம்ம ஷாக் ஆகிவிட்டாராம். ஏனெனில், கலாபக் காதலன் படத்துக்காக அவர் ஆடிசன் சென்று மயங்கி விழுந்த அதே கட்டிடத்தை தான் காட்டி இருக்கிறார்கள். அந்த இடத்தைப் பார்த்ததும் நெகிழ்ந்துபோன சூரி, உடனே அதனை வாங்கிவிட்டாராம். தற்போது அங்கு தான் சூரியின் அலுவலகம் உள்ளது.
இதையும் படியுங்கள்... 10 நிமிடம் அட்ஜஸ்மெண்ட் செஞ்சா... லேடி சூப்பர்ஸ்டார் மகளாக நடிக்க வாய்ப்பு - நடிகை மாளவிகா பகீர் புகார்