லவ் யூ பட்டு... வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணத்தால் மனமுடைந்து போன குஷ்பு - கலங்கவைக்கும் டுவிட்டர் பதிவு இதோ
நடிகை குஷ்பு தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் மரணமடைந்ததை அடுத்து, அந்த நாயின் புகைப்படங்களை பதிவிட்டு எமோஷனல் டுவிட் ஒன்றையும் போட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவர் தற்போது சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டு அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருந்த நடிகை குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார். நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் தற்போது அரண்மனை படத்தின் 4-ம் பாகத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நடிகை குஷ்பு அரசியலில் இணைந்த பின்னர் டுவிட்டரில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சமூகத்தில் நிகழும் முக்கிய நிகழ்வுகளுக்கு குரல் கொடுப்பது, யாரேனும் தன்னை விமர்சித்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்பது என குஷ்புவின் செயல்பாடு டுவிட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும். அரசியல் மட்டுமின்றி தனது வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் குஷ்பு டுவிட்டரில் பதிவிடுவார்.
இதையும் படியுங்கள்... தளபதியை சந்தித்த புரட்சிதளபதி! விஜய்யின் புது ஆபிஸுக்கு திடீர் விசிட் அடித்த மார்க் ஆண்டனி டீம்- பின்னணி என்ன?
அந்த வகையில் இன்று அவர் பதிவிட்ட பதிவு அவரது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை குஷ்பு தனது வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்துவிட்டதாம். கடந்த 12 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்து வந்த ஸ்நூபி என்கிற அந்த நாயின் மரணம் குஷ்புவையும் அவரது குடும்பத்தினரையும் கண்கலங்க செய்துள்ளது. அந்த நாயின் புகைப்படத்துடன் குஷ்பு போட்டுள்ள எமோஷனல் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த டுவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் எங்களில் ஒருவராய் நீ இருந்தாய். ஒரு கூச்ச சுபாவமுள்ள நாய்குட்டியாக எங்களிடம் வந்த நீ, எங்கள் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துவிட்டாய். உனது புரிதல், நீ காட்டும் நிபந்தனையற்ற அன்பு, உன் புன்னகை, கோபம், பாதுகாக்கும் இயல்பு உள்ளிட்ட உனது குணங்கள் எங்கள் மனதைக் கவர்ந்தன. உன் இறப்பால் நாங்கள் மனமுடைந்துபோய் உள்ளோம். நீ நிம்மதியாக இருப்பாய் என நம்புகிறோம். மிஸ் யூ ஸ்னூபி. உன்னை போல் யாரும் இருக்க முடியாது. லவ் யூ பாட்டு. கடவுளே தயவு செய்து அவனை பார்த்துக்கொள்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... குஷ்பு, நமீதா, நயனை தொடர்ந்து... நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்! இது எங்க? - முழு விவரம் உள்ளே