கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. 2006ம் ஆண்டு திரைக்கு வந்த இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இயக்குநர் கெளதம் மேனன் இறங்கியுள்ளார். 

 

இதையும் படிங்க; நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

ஏற்கனவே கமல் ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனுக்கு பிறகே இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த கமல் ஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற படத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ளதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

 

இதையும் படிங்க: நிர்வாண போட்டோவை பகிர்ந்த மீரா மிதுன்...மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

இதை முடித்த பிறகே கமல் ஹாசன் வேட்டையாடு விளையாடு 2 படத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி கீர்த்தி சுரேஷ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். கொரோனா லாக்டவுனுக்கு பிறகு படத்தில் யார் எல்லாம் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்ப்தாக கூறப்படுகிறது.