தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சிறிய வயதில், மிகவும் குண்டாக இருக்கும்போது குடும்பத்துடன் சேர்ந்து, நடிகர் மோகன் லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்: காதலி நயனுடன் படப்பிடிப்பில் இணைவது எப்போது? நாள் குறித்த விக்னேஷ் சிவன்! சுடசுட அப்டேட்!
 

நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியடைந்தாலும், தற்போது சிறந்த நடிகை என்கிற இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

மேலும் இவர் அறிமுகமான சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, விஷால், தனுஷ், விக்ரம், என முன்னணி நடிகர்கள் படங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்தார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். நடிகை நயன்தாராவின் பாணியை பின்பற்றி தற்போது, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்வதில் அதிக கவனம் காட்டுகிறார்.

மேலும் செய்திகள்: வாய்ப்பும் இல்லை... வருமானமும் இல்லை... குடும்பத்தை காப்பாற்ற தெருத்தெருவாக பழம் விற்கும் நடிகர்!
 

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி உள்ள, 'பெண்குயின்' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இந்த படத்தில் நடிப்பதற்காக, பாலிவுட் பட வாய்ப்பையே வேண்டாம் என கூறி கூறிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்: நடிகருடன் காதல் திருமணம்... கள்ளக்காதல் பிரச்சனை! 4வது முறையாக பெயரை மாற்றி தமிழில் கவனம் செலுத்தும் நடிகை!
 

இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே ,முடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ், மோகன் லால் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். இதில் கொழு கொழு என இருக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.