பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வீட்டில், துப்பாக்கி சூடு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் பிரபலமானவர் கங்கனா ரணாவத் தற்போது, மறைந்த நடிகையும், முதலமைச்சருமான ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகள்: மாரடைப்பால் இறந்த நடிகர் சேது குடும்பத்தில் நடந்த நல்ல காரியம்... புது வரவால் உறவினர்கள் உற்சாகம்...!
 

ஏற்கனவே நடிகர் ரித்திக்ரோஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக, அவரை புரட்டியெடுத்த இவர், தற்போது இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரனாவத் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கலக்கவரும் நடிகைகள்... கசிந்த புகைப்படம்..!
 

இதுகுறித்து கங்கனா ரனாவத் கூறுகையில், நான் என்னுடைய அறையில் ஓய்வெடுத்து கொண்டு இருத்தபோது சரியாக இரவு 11.30 மணிக்கு, இரண்டு முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 8 வினாடி இடைவெளியில் இரண்டு குண்டுகள் சத்தம் கேட்டது. தன்னுடைய வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு பின்னால் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனவே தன்னுடைய வீட்டின் பின்னால் உள்ள காட்டு பகுதிக்குள் புகுந்து அவர்கள் தப்பித்து சென்றிருக்கலாம்.

நான் மும்பையில் இருந்து மாணாலிக்கு வந்துள்ளதால் இந்த வீட்டை குறி வைத்து சுட்டுள்ளனர். இதற்க்கு நானே சாட்சி. சத்தம் கேட்டதும் பாதுகாவலர் வீட்டை சுற்றி நோட்டமிட்டதில் யாரும் இல்லை. எனவே உள்ளூரில் உள்ளவர்களை வைத்து தன்னை பயமுறுத்த வேண்டும் என்பதால், பணம் கொடுத்து இப்படி செய்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்: வாவ்... அசரவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!
 

சுஷாந்த் சிங்கையும் இப்படி தான் பயமுறுத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். யார் என்னசெய்தாலும் நான் பின்வாங்க மாட்டேன். தெடர்ந்து கேள்விகள் கேட்பேன் என்று கூறியுள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது நடிகை கங்கனா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.