இயக்குனர் ஏ.எல்.விஜய் செய்த செயல்..! மேடையில் கண் கலங்கி அழுத நடிகை கங்கனா!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகை கங்கனா ரனாவத் கண் கலங்கி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களை நெகிழவைக்கும் விதத்தில் இருந்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, 'தலைவி' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, இன்று மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நடிகை கங்கனா ரனாவத் கண் கலங்கி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களை நெகிழவைக்கும் விதத்தில் இருந்தது.
மேலும் செய்திகள்: ஸ்டைலிஷ் உடையில்.. தெத்து பல் சிரிப்பில் ரசிகர்களை ஈர்க்கும் மாயக்காரி.. அம்ரிதா ஐயரின் க்யூட் போட்டோஸ்!
நடிகை கங்கனா ரனாவத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'தலைவி' படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கங்கனா தமிழில் 'தாம்தூம்' படத்தின் நீண்ட இடைவெளி பின் தமிழில் நடித்துள்ள திரைப்படம் 'தலைவி'.
பிரஸ்மீட்டில் நடிகை கங்கனா இந்த படத்தில் நடித்தது குறித்து கூறுகையில்... "தலைவியின் திரைப்படத்திற்காக முதலில் தன்னை ஏ.எல்.விஜய் அணுகியபோது, நடிப்பதற்கு தங்கியதாகவும் பின்னர் இயக்குனர்கள் விஜய் தான் தன்னை ஒப்புக் கொள்ள வைத்ததாக தெரிவித்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தில் அரவிந்த்சாமி மாதிரியான நடிகர்கள் அளித்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை குறிப்பிட்டு கூறினார்.
மேலும் செய்திகள்: பல பரிமாணங்களில் ஜெயலலிதாவாகவே மிளிர்ந்த கங்கனா... ‘தலைவி’ பட புகைப்பட தொகுப்பு...!
பல பாலிவுட் படங்களில், நாயகிக்கு முக்கியத்தும் தரும் கதாபாத்திரங்களில், நடிகைகளுக்கு ஹீரோக்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. ஆனால் 'தலைவி' படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் தன்னை மிகவும் மரியாதையாக நடத்திய செயலை கூறி மேடையிலேயே அனைவர் மத்தியிலும் கண்கலங்கி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.
மேலும் செய்திகள்: ஆட்டோவில் சடலமாக மீட்கப்பட்ட 'காதல்' பட நடிகர் விருச்சிககாந்த்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பிறந்த நாளும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் விஜய், உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு, 'பாகுபலி' படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தமிழ், இந்தி, என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி மிக பிரமாண்டமாக பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.