'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  பலரும் இந்த விபத்தில் உயிரிழந்த, துணை இயக்குனர், கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் பணியாற்றி வரும் பலரும் இந்த பேரதிர்ச்சியை இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்கள். நடிகர் கமலஹாசன் ஏற்கனவே... தன்னுடையா ட்விட்டர் பக்கத்தில், "எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: அஜித்தின் தீவிர ரசிகர் மது...! இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த பிரபலத்தின் மருமகன் கிருஷ்ணா !
 

அதே போல், மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.  முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும், என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மன வேதனையை கூறி இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்... " என்னுடைய மன வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எதிர்பாராமல் நேற்று இரவு  நடந்த விபத்தில் மூன்று சகாக்களை இழந்துள்ளோம். கிருஷ்ணா, மது மற்றும் சந்திரன் ஆகியோரின் இழப்பை தாங்க அவர்களுடைய குடும்பத்திற்கு கடவுள் வலிமையை தரவேண்டு என கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.