பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போது நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி வரும் திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 9 : 30 மணிக்கு, படப்பிடிப்பு செட் அமைக்கும் பணியை கிரேன் உதவியுடன், ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் , மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, கிரேன் மேலே இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கிரேன் உதவியுடன் செட் அம்மைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மிகவும் உயரத்தில் இருந்து கீழேயே விழுந்ததில் அதிக காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.

இந்த மூவரில் ஒருவர் பிரபல கார்ட்டூனிஸ்டின் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவர். மேலும் அஜித்தின் தீவிர ரசிகருமான, மது என்பவற்றின் புகைப்படமும், கார்டூனின்ஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் மது அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. தயாரிப்பு தரப்பில் அசிஸ்டெண்டாக பணியாற்றி வந்த மது, கிருஷ்ணா, சந்திரன் என மூவர் இந்த கோர விபத்தில்  உயிரிழந்துள்ளனர் .

இந்தியன் 2 படப்பிடிப்பில் இந்த மூவரும் உயிரிழந்துள்ளது, ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.