விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா கோவில்களைப் பற்றி பேசியது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவில்களுக்கு பெயிண்ட் அடிக்கிறீர்கள், நன்றாக பராமரிக்கிறீர்கள் ஆனால் பள்ளிக்கூடம், மருத்துவமனையும் முக்கியமான ஒன்று தான். கோவில் உண்டியலில் காசு போடுவதை விட அதற்கு உதவுங்கள் என்று கோரிக்கைவிடுத்திருந்தார். இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூறி கண்டனங்கள் வலுத்துவருகின்றனர். 

இதையும் படிங்க: கண்கலங்கிய சாய் பல்லவி... பெற்றோருடன் ‘அந்த’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநருக்கு வைத்த ஒற்றை கோரிக்கை...!

ஜோதிகாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறை பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தாள்” படத்தின் டிஜிட்டல் விற்பனை பல கோடிகளுக்கு கைமாறியுள்ளது. தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் அனைத்தும் மே 3ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. 

அப்படி கொரோனா பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும் ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் ஆரம்பித்து, பிரபல நடிகர்களின் படங்களோடு மல்லுகட்டுவது ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து வர வேண்டியிருக்கும். அதனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை நேரடியாக அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

புதுமுக இயக்குநரான ஜே.ஜே.பிரிட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்த இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அமேசான் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுவும் வெளியாக நிலையில், “பொன்மகள் வந்தாள்” படத்தின் விளம்பரத்திற்காகவே ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சை கருத்தை பேசியிருக்கலாம் என்று சிலர் சாடிவருகின்றனர். 

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

பெரும்பாலும் பிரபலங்கள் பலரும் தங்களது பட இசை வெளியீட்டு விழாவில் ஏதாவது அரசியல் சம்பந்தமான கருத்துக்களை பேசி அதை வைத்து படத்திற்கான ப்ரீ புரோமோஷனை தேடிக் கொள்வது வழக்கம். இதற்கு முன்னதாக மாஸ்டர் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற ஐ.டி.ரெய்டைக் கூட படத்திற்கான இலவச விளம்பரம் என்று தான் விஜய் ரசிகர்கள் கலாய்த்தனர். அப்படி தான் ஜோதிகா தனது சர்ச்சை கருத்தை வைத்து பொன்மகன் வந்தாள் படத்தை பெரிய லாபத்திற்கு கைமாற்றிவிட்டார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் பட்ஜெட்டை விட இருமடங்கு லாபத்தோடு டிஜிட்டலில் ஒரு படம் விற்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.