“பிரேமம்” படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், சாய் பல்லவி கொக்கி போட்டு கொள்ளையடித்தது என்னமோ தமிழ் ரசிகர்களை தான். “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். 

இதையும் படிங்க: “இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாய் பல்லவியை தமிழில் சினிமாவில் பார்க்க வேண்டுமென கோலிவுட்டே தவம் கிடந்தது. அதற்கு ஏத்த மாதிரியே தமிழில் “கரு“ படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் “மாரி 2” படத்தில் தனுஷுடன் சேர்ந்து ரவுடி பேபி பாட்டுக்கு ஆட்டத்தில் மொத்த தமிழ்நாடே கதிகலங்கியது. அதன் பின்னர் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். அந்த படம் பெரிதாக அவருக்கு கைகொடுக்கவில்லை, அதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள படம் “லவ்ஸ்டோரி” என்ற படத்திலும், ஃபிதா என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களில் நடிப்பதற்காக சாய் பல்லவி வட்டார வழக்கான தெலுங்கு மொழியை கற்பது, டிராக்டர் ஓட்டுவது போன்ற செயல்களை எல்லாம் செய்துள்ளாராம். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திரைப்பிரபலங்களின் ப்ளாஷ்பேக் ஸ்டோரிகள் பல சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

இந்நிலையில் கடந்த ஆண்டு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் ஏகபோக வரவேற்பை பெற்றது. சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், நிவேதிதா, சாரா அர்ஜுனா, ராகுல் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை, நடிகை சாய் பல்லவி தனது பெற்றோர் உடன் சேர்ந்து பார்த்துள்ளார். நான்கு காதல்களை கவித்துவமாக வடிவமைத்திருந்த அந்த படத்தை பார்த்த சாய் பல்லவி எமோஷன் ஆகி கண்ணீர் வடித்துவிட்டாராம். அத்தோடு மட்டுமல்லாது இயக்குநர், ஹலீதாவிற்கு மெசெஜ் மூலமாக வாழ்த்து தெரிவித்த சாய்பல்லவி, இதேபோல சிறந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.