உலகம் முழுவதும் 210 நாடுகளை உலுக்கி எடுக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாளுக்கு நாள் இங்கு கொரோனா தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதுவரை 1395 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11, 706 பேர் குணமடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!

இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இப்படி விஸ்வரூபம் எடுக்கும் கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பதற்காக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் மும்பை பன்வல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அவருடன் நடிகைகள் லுலியா வண்டூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரும் தங்கியுள்ளனர்.  பாலிவுட் நடிகைகளுடன்  பண்ணை வீட்டில் தங்கியுள்ள சல்மான் அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார். அதுதொடர்பான வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சல்மான் கானின் இந்த செயல் பாராட்டுக்களை குவித்து வந்த சமயத்தில், உடன் தங்கியிருந்த நடிகைகள் பார்த்த வேலை அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

இந்த லாக்டவுன் நேரத்திலும் ஹார்பர்ஸ் பஜார் என்ற மேக்சினுக்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.  நடிகை ஜாக்குலின் சல்மான் கானுக்கு சொந்தமான குதிரையுடன் விதவிதமாக கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லாக்டவுன் நேரத்தில் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா? என பலரும் விமர்சித்துள்ளனர்.