Asianet News TamilAsianet News Tamil

கடைசியா அவருடன் நடிச்ச காட்சி இது தான்.. யம்மா நந்தினி என்று கூப்பிட இனி அவர் இல்லை - ஹரிப்ரியா உருக்கம்!

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து அவர்கள் கடந்த செப்டம்பர் 8ம் தேதி, மாரடைப்பால் காலமானார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அவருடைய மறைவை எண்ணி வருந்தி வரும் நிலையில், அவருடன் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகை ஹரிப்ரியா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Actress Hari Priyaa Shared her last screen presence with late actor marimuthu in ethirneechal serial ans
Author
First Published Sep 14, 2023, 9:19 PM IST

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து என்றால் கூறினால், யாருக்கும் சட்டென்று அடையாளம் தெரியாது. ஆனால் அதுவே எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலால் உச்சத்திற்கு சென்றார் மாரிமுத்து என்றால் அது சற்றும் மிகையல்ல என்றே கூறலாம். 

சினிமாவில் மாரிமுத்துவிற்கு கிடைத்த ஒட்டுமொத்த புகழை தாண்டி, எதிர்நீச்சல் என்ற அந்த ஒரே ஒரு சீரியல், அவருக்கு நிறைய ரசிகர்களையும் புகழ், செல்வாக்கையும் கிடைக்கச் செய்தது. கடந்த ஓராண்டில் ஆதி குணசேகரன் பற்றி சோசியல் மீடியாக்களில் போடப்படாத் மீம்ஸே இல்லை என சொல்லும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வந்தார் மாரிமுத்து. 

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... இயற்கை அழகை பீட் பண்ணிய இடுப்பழகி! ரம்யா பாண்டியனின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலுக்காக  டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடக்க முடியாமல் தடுமாறிய நிலையில் வலியையும் பொருட்படுத்தாமல்  தானே காரை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றுள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவர் மறைடைப்பால் இறந்த செய்தி மட்டும்தான் வெளிவந்தது, இந்நிலையில் அவருடன் நடித்த நடிகை ஹரிபிரியா அவரை பெரிய அளவில் மிஸ் செய்து வருகின்றார். காரணம் அந்த சீரியலில் குணசேகரன் மற்றும் நந்தினி இடையே தான் அடிக்கடி சண்டை நடக்கும்.

 

இந்நிலையில் அவருடன் நடித்த கடைசி கட்சியை வெளியிட்டு, இது தான் நான் அவருடன் கடைசியாக நடித்த காட்சி, யம்மா நந்தினி என்று அவர் என்னை கடைசியாக அழைத்து அந்த நொடி தான் என்று கூறி அவருக்கு பிரியாவிடை கொடுப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார் நந்தினி என்கின்ற நடிகை ஹரிப்பிரியா. 

இது தெரியாம போச்சே!! வனிதா விஜயகுமாரின் அக்கா கவிதாவும் ஒரு நடிகையா! எந்த படத்தில் நடிச்சிருக்காங்க தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios