தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 

மேலும் செய்திகள்: நடிகை மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!
 

சிக்கென்ற லுக்கிற்கு மாறிய பின்னர் தனது செகண்ட் இன்னிங்க்ஸை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். சில நடிகைகள் உடல் எடையை குறைந்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள். ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

மேலும் செய்திகள்: விஜய் டிவி பாண்டியன் ஸ்டார் முல்லைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..! மாப்பிள்ளை இவர் தான்...
 

மற்ற நடிகைகளை போல் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவதை தவிர்த்து வந்த ஹன்சிகா சமீபத்தில் கையில் கிளாஸுடன் பிகினியில் நீச்சல் குளத்தில் நின்ற படி கொடுத்த ஹாட் போஸ் சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைத்தது. நடிகைகள் குஷ்பு, த்ரிஷா, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட பலரும் வாய் பிளக்கும் அளவிற்கு செம்ம அழகாக இருந்தார். எப்போது தனது க்யூட் ஸ்மைலை மட்டுமே நம்பி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஹன்சிகா, கொரோனா நேரத்தில் வீட்டில் இருந்தபடி பல ரணகள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத டாப் 20 அரிய புகைப்படங்கள்... உலக அழகினு சும்மாவா சொல்றாங்க..?
 

இந்நிலையில், விடாப்பிடிப்பிடியாக அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பிரச்சனையால், ஸ்லிம் லுக்கிக்கு மாறியும் எதிர்பார்ப்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே தற்போது, புதிய தொழில் ஒன்றிற்கு அச்சாரம் போட்டுள்ளார் ஹன்சிகா அந்த வகையில் இவர் பலூன் பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளாராம். அதாவது பெரிய பெரிய விழாக்களுக்கு அலங்கரிக்கப்படும் பலூன் தயாரிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்துடன் கை கோர்த்து இந்த தொழில் அவர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய தொழிலுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ஹன்சிகாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.