Asianet News Tamil

கிழிந்த ஜீன்ஸை போட்டுக்கொண்டு செம்ம கெத்தாக போஸ் கொடுத்த ஹன்சிகா... அதையே உற்று பார்க்கும் ரசிகர்கள்...!

அங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், கறுப்பு நிற ஸ்லீவ் டாப்ஸ் சகிதமாக  ஹன்சிகா கொடுத்துள்ள கெத்து போஸ் ரசிகர்களின் கண்ணை பறிக்கிறது. 

Actress Hansika Motwani new Slim Look Photo Going Viral
Author
Chennai, First Published Jun 3, 2020, 8:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி. அவரது கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதையும் படிங்க: உச்சகட்ட கவர்ச்சி... 39 வயதிலும் குட்டை உடையில் அட்ராசிட்டி செய்யும் கிரண்...!

எந்த கொழு, கொழு அழகால் ரசிகர்களை வளைத்தாரோ அதனாலேயே பட வாய்ப்புகளை இழந்தார். சமீபத்தில் தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து ஹன்சிகா நடித்த மகா படம் கடைசி, அதை தவிர குட்டி குஷ்பு கைவசம் படங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் உடல் எடையை குறைத்த ஹன்சிகா பட வாய்ப்புகளுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்திவருகிறார். தனது இன்ஸ்டாகிராமே திணறும் அளவிற்கு தினமும் ஹன்சிகா வெளியிடும் அதிரடி போட்டோஸ் லைக்குகளை குவித்துவருகிறது. 

சிக்கென்ற லுக்கிற்கு மாறிய பின்னர் தனது செகண்ட் லுக்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். சில நடிகைகள் உடல் எடையை குறைந்தால் பார்க்க ஆள் அடையாளமே தெரியாமல் சற்று அழகிலும் குறைந்து போய் தெரிவார்கள். ஆனால் ஹன்சிகா என்ன தான் உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மாக மாறினாலும் அவருடைய அழகு குறைவில்லை என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். 

இதையும் படிங்க: “ட்வீட்டை ஒழுங்கா பாத்தியாடா?”.... ஒருமையில் திட்டிய சூர்யா ரசிகரை தனது பாணியிலேயே டீல் செய்த சரத்குமார்...!

மற்ற நடிகைகளை போல் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவதை தவிர்த்து வந்த ஹன்சிகா சமீபத்தில் கையில் கிளாஸுடன் பிகினியில் நீச்சல் குளத்தில் நின்ற படி கொடுத்த ஹாட் போஸ் சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைத்தது. நடிகைகள் குஷ்பு, த்ரிஷா, ஸ்ரீரெட்டி உள்ளிட்ட பலரும் வாய் பிளக்கும் அளவிற்கு செம்ம அழகாக இருந்தார். எப்போது தனது க்யூட் ஸ்மைலை மட்டுமே நம்பி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஹன்சிகா, இன்று தனது ஸ்லிம் லுக் முழுவதும் தெரியும் படியாக போஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: என்னாது நிர்வாண யோகாவா?.... ஊரடங்கில் எல்லை மீறி ஆட்டம் போடும் இளம் நடிகை...!

அங்காங்கே கிழிந்து தொங்கும் ஜீன்ஸ், கறுப்பு நிற ஸ்லீவ் டாப்ஸ் சகிதமாக  ஹன்சிகா கொடுத்துள்ள கெத்து போஸ் ரசிகர்களின் கண்ணை பறிக்கிறது. ஹன்சிகாவின் இந்த அவுட்பிட்டை பலரும் பாராட்டினாலும் அதில் இருக்கும் ஓட்டைகள் எத்தனை என்பதை தான் ரசிகர்களின் கண்கள் ஆவலுடன் தேடும் என போட்டோவை பார்த்தாலே தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios