தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதையும் படிங்க:  கொரோனாவின் கோரப்பிடியில் பாகிஸ்தான்... மின்னல் வேகத்தில் உயரும் பாதிப்பு...!


ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. அதனால் தனது கொழுக்கு, மொழுக்கு உடல் எடையை குறைத்து ஸ்லீம் அழகிற்கு மாறியுள்ள ஹன்சிகா, தனது ஹாட் போட்டோஸை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். ஹன்சிகாவின் அதிரிபுதிரி கவர்ச்சியில் மயங்கி நெட்டிசன்களிலும் லைக்குகளை குவிக்கின்றனர். 

இதையும் படிங்க: இப்படியும் பரவுமாம் கொரோனா வைரஸ்?... அடுத்தடுத்து பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்...!

தற்போது கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்துள்ள இந்த சமயத்தில், ஹன்சிகா செய்துள்ள சாதனை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குட்டி குஷ்பு என ரசிகர்கள் தலை மேல் வைத்து கொண்டாடிய ஹன்சிகா, தென்னிந்திய நடிகைகளிலேயே முதன் முறையாக யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...! 

ஹன்சிகாவின் க்யூட் ரியாக்‌ஷன்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே அவரது சின்ன, சின்ன சேட்டைகளை கொண்டு சோசியல் மீடியாவில் முதன் முறையாக GIF உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஹன்சிகாவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.