சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கொடூர வேர்களை பரப்பி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 190க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் வல்லரசு நாடுகளே கொரோனாவிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. 

இதையும் படிங்க: இப்படியும் பரவுமாம் கொரோனா வைரஸ்?... அடுத்தடுத்து பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்...!

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸால் 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்  26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 676 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கூட்டம் கூட்டமாக வெளியே வரும் மக்களை தவிர்ப்பதற்காக கடைகள் திறக்கப்படும் நேரத்தையும் குறைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


இதையும் படிங்க: அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!


இந்நிலையில் நமது அண்டை நாடனா பாகிஸ்தான் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிந்த் பகுதியில் இதுவரை இதுவரை 460க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு திண்டாடி வருகிறது.