பெமினா மிஸ் இந்தியா அழகி பட்டம், மிஸ் இன்டர்நேஷனல்  2007 உள்ளிட்ட, அழகி பட்டங்களை பெற்று மிகவும் பிரபலமானவர் நடிகையும், மாடலுமான ஈஷா குப்தா தற்போது முதல் முறையாக தன்னுடைய காதலர் யார் என்பதை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் 'ஜெண்டா 2 ' படத்தின் மூலம் கதாநாயகியாக 2012 ஆம் ஆண்டு அறிமுகமான ஈஷா குப்தாவிற்கு, தொடர்ந்து பல இந்தி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது. 

இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான 'யார் இவன்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார்.

மேலும் செய்திகள்: பிரபாகரன் பெயர் சர்ச்சை: வன்மையாக கண்டித்து.. திருமாவளவன் சொன்ன அதிரடி தீர்வு!
 

35 வயதாகும் ஈஷா குப்தா கடந்த சில வருடங்களாக, மேனுவல் கேம்போஸ் கௌலர் என்ற தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அடிக்கடி அவருடன் டேட்டிங், மற்றும் அவுட்டிங் செல்வதில் பிஸியாக இருப்பதாக தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் ஒரு தகவல் உலாவி வந்த நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில்  பகிரங்கமாக அதனை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கருப்பு நிற உடையில் தன்னுடைய காதலருடன் மிகவும் ஸ்டைலிஷாக நின்றபடி போஸ் கொடுத்து, உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்று ஸ்பானிஷ் மொழியில் கூறியுள்ளார். இதை தொடர்ந்து, ரசிகர்கள் எப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்பதை கேட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின்... இதுவரை பார்த்திராத அழகு புகைப்படங்கள்!
 

இந்த கேள்விக்கும், மிக விரைவிலேயே... ஈஷா குப்தா பதில் அளிப்பார் என தெரிகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

te amo mucho mi amor ♥️

A post shared by Esha Gupta🌎 (@egupta) on Apr 27, 2020 at 1:02am PDT