‘நாய்க்கு’ பிரபாகரன் பெயர்... வன்மையாக கண்டித்து திருமாவளவன் சொன்ன அதிரடி தீர்வு...!

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதற்காக துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார்.
 
prbaharan name issue thirumavalavan angry twit

மேலும் இந்த  படத்தில் தமிழர்களால் வீர தலைவராக பார்க்கப்படும், பிரபாகரன் பெயரை அவமதித்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும்  நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருந்தனர்.

prbaharan name issue thirumavalavan angry twit

காமெடி காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதற்கான காரணத்தை கூறியுள்ள துல்கர் சல்மான், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய கண்டனங்களை எழுப்பி முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

prbaharan name issue thirumavalavan angry twit

இதை தொடர்ந்து தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், தன்னுடைய கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, குறிப்பிட்ட அந்த சர்ச்சை காட்சியை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

prbaharan name issue thirumavalavan angry twit

இதுகுறித்து அவர் கூறுகையில்... ' வரனே அவஷ்யமுண்டே' என்னும் மலையாள படத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை அவமதிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது இப்படக் குழுவினரின் இழிபோக்கை வெளிப்படுத்துகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர் துல்கர்சல்மான்  மன்னிப்புக் கேட்டுள்ளார் என்றாலும், அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்  என இந்த பிரச்சனைக்கு தீர்வையும் அவரே தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios