நடிகை தேவயானி தனது 51-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார். பிறந்தநாள் பார்ட்டியில் அவர் நடனமாடி வைப் செய்துள்ள வீடியோவை அவரது தம்பி நகுல் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Actress Devayani 51st Birthday

1993 ஆம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான ‘சாத் பென்சொமி’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தேவயானி. அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு ‘கின்னாரிப் புழையோரம்’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் 1995 ஆம் ஆண்டு தமிழில் ‘தொட்டா சிணுங்கி’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால் முதல் படம் இவருக்கு பெரிய அளவில் அறிமுகத்தை ஏற்படுத்தி தரவில்லை. இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருதும் தேவயானிக்கு கிடைத்தது.

தேவயானி - ராஜகுமரன் காதல்

1997 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’ மற்றும் ‘சூரிய வம்சம்’ இரண்டு படங்களும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ‘சூரியவம்சம்’ திரைப்படம் தேவயானிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்திற்காக மீண்டும் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதும் அவருக்கு கிடைத்தது. தொடர்ந்து அவர் தமிழில் நினைத்தேன் வந்தாய், மூவேந்தர், செந்தூரம், தொடரும், நீ வருவாய் என, தெனாலி, பாரதி, ஆனந்தம், ஃபிரண்ட்ஸ், அழகி, கோட்டை மாரியம்மன், பஞ்சதந்திரம், காதலுடன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் ராஜகுமரனுக்கும் தேவயானிக்கும் காதல் ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறி திருமணம்

தேவயானியின் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் ராஜ்குமார் தேவயானி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு தேவயானியின் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. தேவயானியின் சகோதரர்களும், அவரது தாயும் தேவயானி ராஜ்குமார் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேவயானி குடும்பத்தினர் ராஜகுமரன் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

நகுல் தேவயானி இடையே இருந்த மனக்கசப்பு

தேவயானியின் தாயார் ராஜகுமரன் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தால் தேவயானியின் குடும்பத்தினர் கடும் நிதி இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரது சகோதரர் நகுல் தனது முதல் படங்களுக்காக எதிர்பார்த்து இருந்த நிதி கிடைக்காமல் போனதாக சொல்லப்பட்டது. இதன் காரணமாக நகுல் தனது சகோதரி தேவயானி மற்றும் ராஜகுமாரன் மீது ஆரம்பத்தில் மிகவும் கோபமாக இருந்தார். தற்போது காலப்போக்கில் இவர்களிடையே இருந்த உறவு மெல்ல மெல்ல சீரானது. தேவயானியின் தாயார் ராஜகுமாரன் மீது அளித்த புகாரை வாபஸ் பெற்றார். தேவயானியின் மற்றொரு சகோதரரான மாயூர் தேவயானியுடன் நல்லுறவை மீண்டும் ஏற்படுத்திக் கொண்டார்.

View post on Instagram

ராஜகுமரன் மீது கோபம் கொண்ட நகுல்

ஆனால் நகுல் ஆரம்பத்தில் தேவயானி உடன் பேசாமல் இருந்தார். தனது திரை வாழ்க்கையில் ஏற்பட்ட தேக்கத்திற்கு தேவயானி மற்றும் அவரது கணவர் தான் காரணம் என நகுல் கருதுவதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் நகுல் தற்போது தனது சகோதரி குடும்பத்தினர் இடையே மீண்டும் இணைந்து இருக்கிறார். அவர்களிடைய நல்லுறவு மீண்டும் ஏற்பட்டுள்ளது. தேவயானி ராஜகுமாரன் காதல் திருமணம் நகுலுக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்திய நிலையில், தற்போது அது மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை தேவயானி தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு அவரது சகோதரர் நகுல் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார்.

மீண்டும் இணைந்த உறவுகள்

அந்தப் பார்ட்டியில் தேவயானி மற்றும் நகுல் இருவரும் நடனமாடி வைப் செய்துள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்து “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. நீ நினைக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்” என நகுல் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பழைய மனக்கசப்புகளை அனைத்தும் மறந்து சகோதரனும் சகோதரியும் ஒன்று இணைந்திருப்பது தேவயானி ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதே போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவர்கள் இருவரையும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். ‘பாய்ஸ்’ படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான நகுல் அதன் பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவர் ‘வாஸ்கோடகாமா’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.